நந்தியாவட்டை பூ கைப்புச் சுவையும் குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. முக்கியமாகக் கண் நோய்களுக்குப் பயன்படும் பல மருந்துகளில் இது சேர்க்கப்படுகின்றன. கண்காசம், படலம், மண்டைக்குத்தல் ஆகியவை கட்டுப்படும்.
நந்தியாவட்டை பால், வேர், ஆகியவை காரச்சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டவை. நந்தியாவட்டை பால் வெட்டுக் காயங்களைக் குணமாக்கும். நந்தியாவட்டை வேர், புழுக்களைக் கொல்லும்.