கொண்டைக்கடலையில் உள்ள ஏராளமான மருத்துவ பயன்கள் !!

கொண்டைக்கடலையிலிருந்து நாம் பயன்படுத்தும் உடைத்தகடலை, உப்புகடலை, கடலைப்பருப்பு ஆகியவை பெறப்படுகின்றன. இவை பொதுவாக வெள்ளை, கறுப்பு, மற்றும் பச்சை நிறங்களில் காணப்படுகின்றன.

கொண்டைக்கடலையில் ஏராளமான நுண்ணிய ஊட்டச்சத்துக்கள், புரதம் மற்றும் நார்ச்சத்து இருப்பதால் அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது நல்லது. 
 
கொண்டைக்கடலையில் மாங்கனீசு, தையமின், மக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற பல கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை உடலின் ஆற்றலை அதிகரிப்பதோடு நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.
 
கொண்டைக்கடலையில் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ளது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. மேலும் இதில் கரையும்  நார்ச்சத்துக்கள், புரோட்டீன், இரும்புச்சத்து போன்றவை இருக்கிறது. அதனால் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுடன் வைக்க இவை உதவி  செய்கிறது.
 
கொண்டைக்கடலை இரத்த சோகைக்கு சிறந்த உணவுப் பொருள் ஆகும். ஏனெனில் இதில் இரும்புச்சத்து, பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் அதிகம் உள்ளது. இரத்த அழுத்தம் அதிகம் உள்ளவர்கள் கொண்டைக்கடலை சாப்பிட்டு வர, இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுடன் இருக்கும்.
 
கொண்டைக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு ஏற்படாது. கொண்டைக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வரும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு குறைவு. மேலும் மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் மனநிலை மாற்றத்தை சரிசெய்யவும் கொண்டைக்கடலை உதவும்.
 
கொண்டைக்கடலையில் புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் உடல் எடை குறைக்க நினைத்தால் இதனை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளலாம்.  உங்களுக்கு அவ்வப்போது ஏற்படும் பசியை போக்கி நீண்ட நேரம் பசி ஏற்படாமல் தடுக்கும்.
 
கொண்டைக்கடலையை தண்ணீரில் ஊறவைத்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை குறைபாடு நீங்கி ஆண்மை அதிகரிக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்