முருங்கைக்கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து கொண்டால் கருப்பை பலப்படும்.
பச்சை இலை காய்கறிகள்: முட்டைக்கோஸ், கீரை உள்ளிட்ட பச்சை இலைக் காய்கறிகளில் இருக்கும் வைட்டமின் ஏ, சி, கே, ஈ, கால்சியம், இரும்பு, போலேட் மற்றும் நார்ச்சத்துகள், தாதுக்கள் கர்ப்பிணிகள் மற்றும் அவர்களின் வயிற்றில் வளரும் குழந்தைகளின் தேவைகளை பூர்த்தி செய்யும். இவற்றுள் போலேட் மிகவும் முக்கியமான வைட்டமின் ஆகும். இது பிறப்பு குறைபாடுகளை தடுக்கக்கூடியது.
மாதவிலக்கு பிரச்சினை உள்ளவர்கள் வெங்காயத்தாள், காய வைத்த கருப்பு எள், கருஞ்சீரகம் ஆகியவற்றை சம அளவு எடுத்து அரைத்து கொள்ளவும் மாதவிலக்கு தடைபடும் காலங்களில் காலை மாலை இருவேளையும் ஒரு ஸ்பூன் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கு ஏற்படும்.