கருப்பட்டி சுவாசப் பாதை, குடல், உணவுக் குழாய், நுரையீரல் மற்றும் வயிறு ஆகிய உறுப்புகளை சுத்தப்படுத்துகிறது. இது உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றி உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. .
கருப்பட்டி இனிப்பு சுவைக்காக சாக்கலேட், கருப்படி மிட்டாய், கடலை மிட்டாய் போன்ற தென் இந்தியா உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது. கருப்பட்டி வெள்ளை சர்க்கரை அல்லது கரும்பு சர்க்கரைக்கு மாற்றாக பயன்படுத்தப் படுகிறது.
இரும்புச்சத்து அதிகமாக இருப்பதால், இரத்த சோகைக்கு நல்லது. மேலும் கருப்பட்டியில் உள்ள மெக்னீசியம் நரம்பு மண்டலங்களின் சரியான செயல் பாட்டிற்கு இன்றியமையதது. மேலும் பொட்டாசியம் இரத்த அழுத்தம் மற்றும் இதய செயல்பாடுகளை ஒழுங்கு படுத்துகிறது. வாத நோய் மற்றும் பித்த கோளாறுகளை தடுக்கிறது. இருமல் மற்றும் அஜீரணம், அமிலத்தன்மை மற்றும் மலச்சிக்கல் போன்றவற்றிற்கு பயன்படும் மருந்து பொருட்களிலும் பயன்படுகிறது.