சர்க்கரை நோயாளிகள் பாதாம் சாப்பிடுவது நல்லதா...?

சர்க்கரை நோயாளிகளுக்கு பிறரை விட மிக வேகமாக ரத்தத்தின் சர்க்கரை அளவு கூடிடும், உணவு சாப்பிட்டவுடன் இந்த மாற்றம் நிகழும். 
 

இந்நிலையில் உணவிற்கு பிறகு இரண்டு பாதாம் எடுத்துக் கொள்வதினால் உணவு சாப்பிட்ட பிறகு சர்க்கரை அளவு கூடுவதை தவிர்க்கலாம். உணவு சாப்பிடுவதற்கு முன்னர் ஒரு கப் அளவுள்ள பாதாமை எடுத்துக் கொள்ளுங்கள். இதனால் உங்களுக்கு நிறைவான உணர்வைத் தரும் அதோடு உங்கள் உடலுக்குத் தேவையான கலோரியும் கிடைத்திடும். இதனால் கலோரி அதிகமான உணவுகளை எடுத்துக் கொள்வதை தவிர்க்க முடியும்.
 
பாதாமில் அதிகப்படியாக இருக்ககூடிய சத்துக்களில் மக்னீசியமும் ஒன்று. நம் உடலில் போதுமான அளவு மக்னீசியம் இருந்தால் டைப் 2 டயப்பட்டீஸ் ஏற்படாமல் தவிர்க்க முடியும். அதே போல நாட்பட்ட சர்க்கரை நோயாளிகளுக்கு தானாகவே உடலில் மக்னீசியம் குறைந்திடும்.
 
சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி சிறுநீர் கழிப்பார்கள், சிறுநீர் வழியாக உடலில் இருக்கும் மக்னீசியம் சென்றிடும். இதனால் இன்னபிற உடல் உபாதைகள் ஏற்படும். இதனைத் தவிர்க்க பாதாம் பெரிதும் உதவிடுகிறது.
 
பலருக்கும் தெரிந்திருக்கும் சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டால் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகமுண்டு என்பார்கள். அல்லது அவர்களுக்கு இதயத்தில் ஏதேனும் பிரச்சனை இருக்கும். இவர்களுக்கு பாதாம் மிகப்பெரிய வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். 
 
பாதாம் கலோரி அதிகமிருக்கிற ஒரு நட்ஸ். இதனை சாப்பிடுவதால் நிறைவான உணர்வினைக் கொடுக்கும், அதொடு கூடுதலான உணவுகளை எடுத்துக் கொள்ள மாட்டீர்கள் இதனால் உடல் எடையை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க உதவிடும்.
 
சர்க்கரை நோயாளிகளுக்கு குறிப்பாக டைப் 2 டயபட்டீஸினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சோர்வு,உடல் வலி அடிக்கடி ஏற்படும். இவர்களுக்கு பாதாம் ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். தினமும் காலையில் இரண்டு பாதாம் சாப்பிட்டு வருவது நல்லது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்