கீழாநெல்லி: தண்டு மர்றும் கீரையை இடித்து துணியில் பிழிந்து சாறு எடுத்து சம அளவு விளக்கெண்ணெய் கலந்து காலை மாலை கண்களில் ஒன்றிரண்டு சொட்டுகள் விட்டுவர கண்புரை கரையும். மஞ்சள் காமாலை, ரத்தமின்மைக்கு நல்ல மருந்து இது. ஹைபடைடில் பி எனும் கொடிய வைரசால் பாதிப்புற்ற கல்லீரலை மீட்கிறது.
துளசி: மன அழுத்தத்தைக் குறைக்க துளசி டீ ஏற்றது. வைரஸை எதிர்த்தும் பாக்டீரியாவை செயலிழக்கவும் செய்யவல்லது. ஆண்டி ஆக்ஸிடண்டுகள் அதிகம் கொண்டது. தோல் வியாதி, ரத்தத்தை சுத்திகரிக்க, தலைவலி போக்க, ஜீரணத்தை அதிகரிக்க, அஜீரணத்தை போக்கவல்லது
கரிசலாங்கண்ணி: கல்லீரலில் ஏற்படும் புண் வீக்கம் மற்றும் ரத்தக்கசிவை குணப்படுத்தும். இதில் உள்ள இரும்பு சத்து ரத்தத்தில் சிவப்பணுக்களை பெருக்கி ரத்த சோகையை நீக்குகிறது. தலைமுடி, பல், கண், தோலுக்கு ஊட்டத்தை தரவல்லது.