எள்ளில் இருக்கும் எண்ணெய்கள் உடலின் தோலில் பளபளப்பு தன்மையை அதிகப்படுத்துகிறது. மேலும் தோலில் ஏற்பட்டிருக்கும் சொறி, சிரங்கு, படை பாதிப்புகளை கூடிய விரைவில் நீக்கும் தன்மை எள்ளுக்கு உண்டு. தோலில் சுருக்கங்கள் ஏற்படும் தன்மையும் நீங்கும்.
எள் அதிகம் சாப்பிடுவது உடலின் எலும்புகளை வலிமைப்படுத்தும். எள்ளில் செம்பு அதிகம் உள்ளது இது ரத்தத்தில் பிராணவாயுவை அதிகம் கிரகிக்க செய்து, உடலின் அனைத்து பகுதிகளுக்கும் தேவையான சத்துக்கள் சென்றடைவதை உறுதி செய்கிறது.
சிலருக்கு முதுமையின் காரணமாகவும், சரிவர நீர் அருந்தாமல் இருப்பதாலும் சிறுநீர் கழிப்பதில் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. இவர்கள் தினமும் சிறிதளவு எள் சாப்பிட்டு வந்தால் சிறுநீர் அதிகளவு வெளியேறும். சிறுநீரகங்களின் கற்கள் உருவாவதையும் தடுக்கும்.