ஏராளமான புரதச்சத்துக்கள் நிறைந்துள்ள பச்சை பயிறு !!
வியாழன், 9 டிசம்பர் 2021 (09:34 IST)
பயறு வகைகளில் ஏராளமான புரதச் சத்து நிறைந்துள்ளது. பாசிப் பருப்பில் புரதமும், கார்போஹைட்ரேட்டும்,கலோரியும் சரிவிகிதத்தில் கலந்து உள்ளது.
இந்த பருப்பு வகைகளை நன்கு வேக வைத்து சாப்பிடுவது நல்லது என்பதால்தான், குழைந்து செய்யும் பொங்கல்மற்றும் கூட்டுக்களை இந்த பருப்பை வைத்து செய்துள்ளனர் நம் முன்னோர்கள்.
பயற்றம் பருப்பை வேக வைத்த தண்ணீரை உப்பும், காரமும் சேர்த்து நோயுற்ற பின் மெலிந்து பலக்குறையுள்ளவர்கள் சாப்பிடக் களைப்பு நீங்கிப் பலம் உண்டாகும்.
உபவாசமிருப்பவர்கள் ஏதேனும் ஒரு வேளை லகுவாக உணவேற்பதாயின், பயற்றங் கஞ்சித் தெளிவுடன் பாலும், சர்க்கரையும் சேர்த்து உண்பர். சீக்கிரம் ஜீரணமாவதுடன் உபவாச நிலையில் அதிகரித்துள்ள பித்தத்தின் சீர் கேட்டைத் தணிக்க இது பெரிதும் உதவும்.
பச்சைப் பயிரை வேக வைத்து, கடுகு, சின்ன வெங்காயம், தாளித்து உப்பு சேர்த்து, சப்பாத்திக்குத் தொட்டுக் கொள்ள கூட்டாகவும் உபயோகிக்கலாம். இது மிகவும் சத்தானது.
தலையில் உள்ள எண்ணெய் பசையை நீக்க இதன் தூள் மிகச் சிறந்தது. தலைக்கும், கண்ணுக்கும் குளிர்ச்சி தரும். சிகைக்காய் போன்றவை ஒத்துக் கொள்ளாத போது, இது அதிகம் உதவுகின்றது.
பச்சை பயிறு அன்றாட வாழ்வில் சிறிதளவு சேர்த்துக் கொண்டு வரும்போது அதில் உடலுக்கு வேண்டிய இரும்புச்சத்து கிடைக்கிறது மற்றும் இரத்த சோகையில் இருந்து தப்பிக்கலாம்.
பச்சை பயறு இரத்த அழுத்தத்தினை கட்டுப்பாட்டுடன் வைக்கவும், மற்றும் கொலஸ்ட்ரால் அளவை குறைக்கவும் பெரிய அளவில் பயன்படுகிறது. எனவே அன்றாடம் பச்சை பயறு அல்லது பாசிப் பருப்பை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.