குழந்தைகள் வளர்ச்சிக்கு, இரத்த விருத்திக்கு, உடல் வலி குணமாக, கர்ப்பிணிப் பெண்களுக்கு, மாதவிலக்குக் காலங்களில் பெண்களுக்கு, மலச்சிக்கல் தீர, குடல்புண் ஆற, இதயத் துடிப்பு சீராக, சுகமான நித்திரைக்கு என்று இதன் பயனை அடுக்கிக்கொண்டே போகலாம்.
கால்சியம் அதாவது சுண்ணாம்புச் சத்து இந்தப் பழத்தில் அதிகம் நிறைந்துள்ளது. இந்தப் பழத்தை இரவு உணவுக்குப் பிறகு 10 பழங்கள் வீதம் எடுத்து பாலில் போட்டு காய்ச்சி பாலையும் பழத்தையும் சாப்பிட்டு வந்தால் குழந்தைகள் ஆரோக்கியமாகவும், பலமாகவும் இருப்பார்கள்.
தினந்தோறும் திராட்சை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் என்ற பேச்சுக்கே இடமில்லை. திராட்சைப்பழத்தில் மாலிக், சிட்ரிக், டர்டாரிக் போன்ற அமிலங்கள் இருப்பதால் இவை ரத்தத்தில் உள்ள நச்சை சுத்திகரித்து மலம் கழிவதற்கான பெருங்குடல் தூண்டுதலுக்கு உதவுகின்றன. இதுதவிர சிறுநீரகங்களுக்கும் பக்கபலமாக இருக்கக்கூடியது.
குடல் புண் உள்ளவர்கள் தினமும் திராட்சைச்சாறு அருந்தி வந்தால், குடல்புண் குணமாவதுடன் குடல் வலிமை பெறும். மூல நோய்களை போக்கக்கூடியது. சில நேரங்களில் சிலருக்கு உடல் முழுவதும் எரிவதுபோன்ற உணர்வு ஏற்படுவது மட்டுமல்லாமல், உண்மையாகவே உடம்பில் எரிச்சல் உண்டாகும். இப்படிப்பட்ட பாதிப்பு உள்ளவர்கள் தினமும் திராட்சைச்சாறு அருந்தி வந்தால் நிச்சயம் குணம் கிடைக்கும்.