குழந்தைகளுக்கு ஏற்படும் சளியை நீக்கும் பாட்டி வைத்தியம்..!!

குழந்தைகளுக்கு சளி, இருமல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் போது, குழந்தைகள் மூச்சு விடுவதற்கே மிகவும் சிரமப்படுவார்கள். இந்த சளி, இருமல்  பிரச்சனையை சரி செய்வதற்கு நம் பாட்டி வைத்தியம் பயனுள்ளதாக இருக்கிறது.

1 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு குடிக்கும் பாலுடன் இம்மியளவு  டர்மெரிக் மில்க் மசாலாவை கலந்து கொடுக்கலாம்.டர்மெரிக் மில்க் மசாலாவில் கலந்துள்ள மஞ்சள் மற்றும் சளியை நீக்கும் ஆர்கானிக் மசாலா பொருட்கள் சளி தொல்லையில் இருந்து விரைவில் குணமடைய வழி செய்கிறது
 
குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமல் பிரச்சனையை சரி செய்வதற்கு ஓமவல்லி இலை மிகவும் சிறந்த மருந்தாக விளங்குகிறது. இந்த ஓமவல்லி இலையை வைத்து குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமல் பிரச்சனையை சரி செய்யலாம்.
 
குழந்தைகளுக்கு மூச்சுவிடுவதற்குச் சிரமத்தை ஏற்படுத்திவிடும். அதனால், மருந்துகளுக்குப் பதிலாக, பாலில் மஞ்சள்தூள், இஞ்சி, தேன் கலந்து குடித்தால் இருமல்  குறையும். 
 
2 பல் பூண்டை எடுத்து உரித்துக்கொண்டு அதை 50 மில்லி தண்ணீரில் போட்டு 10 நிமிடங்கள் வரை வேக விடவும். ஆறிய பிறகு இந்த தண்ணீரை எடுத்து 2 முதல்  3 மணி நேரத்திற்கு ஒரு முறை குழந்தைக்கு தரவும். 4 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு இதனை தர வேண்டும்.
 
குழந்தைகளுக்கு இருமல் அதிகமாக இருந்தால் பாலில், இஞ்சி தேன் கலந்து கொடுக்கலாம். கற்பூரவல்லி, துளசி ஆகியவற்றாலான கஷாயம் செய்து கொடுக்கலாம்.
 
சளியை வெளியேற்றும் தன்மை இஞ்சிக்கு உள்ளது மேலும் மூக்கடைப்புக்கும் இஞ்சி சிறந்த தீர்வளிக்கும். இஞ்சியை பொடியாக துருவிக் கொண்டு அதனை  வெந்நீரில் போட்டு வைத்து 10 நிமிடங்களுக்கு பிறகு அந்த தண்ணீரை குழந்தைக்கு தரலாம். 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு இதனை தர வேண்டும்.
 
துளசி இலையில் சிறந்த மருத்துவ தன்மை உள்ளதால் இதனை தண்ணீர் அல்லது பாலுடன் சேர்த்து தரலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்