வெந்தயத்தை தொடர்ந்து சாப்பிடுவதால் செரிமான திறனை மேம்படுத்துமா...?

வியாழன், 14 ஏப்ரல் 2022 (17:07 IST)
சாதம் வடித்த கஞ்சியில் வெந்தயத்தைச் சேர்த்து காய்ச்சிக் கொடுக்க தாய்ப்பால் சுரக்கும். தொடர்ந்து வெந்தயம் சாப்பிட்ட வந்தால் விரிந்த கர்ப்பபை விரைவாக சுருங்கும்.


வெந்தயத்தில் அதிகளவு நார்ச்சத்து இருப்பதால் இருதயத்தை பலமாக்குகிறது. இதனால் இருதயத்தில் ஏற்படும் பிரச்சனைகள் தடுக்க உதவுகின்றது.

வெந்தயம் தொடர்ந்து சாப்பிடுவதால் செரிமான திறன் மேம்படுகிறது. இதனால் பசியின்மை பிரச்சனை தீர்கிறது. வயிறு பொறுமல் நீக்கி குடலை சுத்தமாக வைத்துக்கொள்ள உதவுகின்றது.

வெந்தயத்தை ஊறவைத்த தண்ணீரை குடித்து வந்தால் நெஞ்சு எரிச்சல் மற்றும் ஒவ்வாமை தீரும். தொண்டையில் புண்ணால் ஏற்பட்ட இடங்களில் வெந்தய தண்ணீர் படும் போது நல்ல இதமாக இருப்பதுடன் உடல் சூட்டை தணித்து உடலுக்கு குளிச்சி அளிக்கின்றது.

வெந்தயத்திலுள்ள எண்ணெய் பசை தலைமுடிக்கு வளர்ச்சியையும், கருமை நிறத்தையும் தருகிறது. எனவே கூந்தல் தைலங்கள் மற்றும் எண்ணெய் தயாரிப்பில் பயன்படுகிறது.

வெந்தயத்தில் அதிக அளவில் கரையும் நார்ச்சத்து உள்ளது. இது ஜீரணத்தின் வேகத்தைக் குறைத்து கார்போஹைட்ரேட் உணவுகளை உண்ணும் அளவையும் குறைக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்