முகத்தில் ஏற்படும் பருக்கள், புள்ளிகள், சுருக்கங்கள் மற்றும் படை போன்ற இடங்களில் இளநீரை இரவில் படுக்கும் போது தடவிவிட்டு காலையில் கழுவ வேண்டும். இதனை தொடர்ச்சியாக மூன்று வாரங்கள் செய்தால் சரும பிரச்சனைகள் சரியாகும்.
இளநீரில் கால்சியம், இரும்பு, மாங்கனீசு, மெக்னீசியம் மற்றும் ஜிங்க் போன்ற கனிமங்கள் உள்ளன. இந்த கனிமங்கள் ஆரஞ்சு போன்ற பழங்களை விட அதிகமாக உள்ளன. ஆகவே சருமம் அழகாக பொலிவுடன் இருக்கும்.