ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டுள்ள இலவங்கப்பட்டை !!

ஒரு தேக்கரண்டி இலவங்கப்பட்டையில் 1.4 கிராம் நார்ச்சத்து, கால்சியம், வைட்டமின் A, B, K உள்ளது. மேலும் ஆன்டியாக்ஸிடன்டுகளும் ஏராளமான அளவில்  உள்ளது.

சின்னமால்டிஹைட் என்ற ஒரு பொருள் இலவங்கப்பட்டையில் உள்ளது. நோய்த்தொற்றுகளை எதிர்த்து போராடும் ஆற்றல் இதற்கு உண்டு. இலவங்கப்பட்டையில்  ஆன்டி பாக்டீரியல், ஆன்டி வைரல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன. 
 
இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைக்கிறது. இரத்த சர்க்கரை அளவு சீராக இருக்க இன்சுலின் மிகவும் அவசியம். இத்தகைய இன்சுலின் உணர்திறனை மேம்படுத்த பட்டை உதவுகிறது. அதே போல இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை குறைக்கிறது.
 
இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்க பட்டை உதவுகிறது. இதனால் இதய நோய்கள் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.
 
இலவங்கப்பட்டையை எடுத்து கொள்வது இரத்தத்தில் உள்ள அழுத்தத்தை சீராக வைக்கும். எனவே உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் பட்டையை  தொடர்ந்து எடுத்து வரலாம்.
 
இலவங்கப்பட்டைக்கு புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது புற்றுநோய் செல்களை அழிக்க வல்லது. அதோடு கேன்சர் கட்டிகள் மேலும் உருவாவதையும்  தடுக்கிறது. குறிப்பாக இலவங்கப்பட்டை பெருங்குடல் புற்றுநோய்க்கு எதிராக செயல்படுகிறது.
 
சருமம் ஆரோக்கியமாக இருக்க இலவங்கப்பட்டையை பயன்படுத்துங்கள். பருக்களை உண்டாக்கும் பாக்டீரியாக்களுக்கு எதிர்த்து போராடுகிரது. பட்டை தூளுடன் தேன் கலந்து பருக்கள் இருக்கும் இடத்தில் தினமும் பூசி வர நல்ல மாற்றத்தை காணலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்