ஏலக்காய் உடலில் உள்ள கொழுப்பை கரைத்து, இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. மேலும், நமது உடலில் இரத்தம் இரத்தம் சீராக ஓட உதவி செய்கிறது. உணவில் ஏலக்காயை சேர்த்துக்கொள்ளும் போது உடலில் உள்ள கேன்சர் கிருமிகளை அழிக்கிறது.
ஏலக்காயை கசாயம் போல செய்து குடித்து வந்தால் ஜலதோஷம், இருமல், தும்மல் போன்ற பிரச்சனைகள் தீரும். அஜீரண கோளாறு பிரச்சனை உள்ளவர்கள் ஏலக்காயை மிளகுடன் சேர்த்து நெய்யில் வறுத்து பொடி செய்து சாப்பிடலாம்.