பொட்டுக்கடலையில் உள்ள ஊட்டச்சத்துகள் நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன. உடைத்த கடலை பருப்பில் மாங்கனீஸ், பாஸ்பரஸ், போலேட் மற்றும் காப்பர் போன்ற இதய நோய்களை குறைக்கும் சத்துக்களும் உள்ளன.
உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றவும், உள்ளுறுப்புகளை சுத்தம் செய்து ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. அடிக்கடி உடல்நலக் குறைவால் பாதிக்கப்படுகின்றவர்கள், உடைத்த கடலை பருப்புகளை சாப்பிட்டுவந்தால் நோயெதிர்ப்பு சக்தி மேம்படும்.
உடைத்த கடலை பருப்பை சாப்பிட்டால், உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்கள் கரைக்கப்பட்டு, உயரதிற்கு ஏற்ற உடல் எடையை பெற உதவுகிறது. உடல் பருமன் உள்ளவர்கள் பொட்டுக்கடலையை சாப்பிட்டால் உடல் எடை குறையும், உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.