உங்கள் மூளையில் ஆரோக்கியமான நியூரான்கள் உருவாகுவதற்கும், நியூரான் செல்களுக்கிடையே உள்ள தொடர்புகளை அதிகரிக்கவும் செய்கிறது. அதற்கு நீங்கள் மேற்கொள்ளும் விரதம் தூண்டுகிறது. மேலும் இதனால் பல நோய்கள் ஏற்படுவது குறைக்கப்படுவதோடு, மனத்தெளிவை ஏற்படுத்துகிறது.
விரதம் இருப்பதால் இன்சுலின் அளவை குறைத்து, இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறது. சில பேருக்கு தெரியாது எப்ப பசிக்குது எப்ப சாப்பிடனும் என்று. விரதம் உங்கள் பசி செயலை தூண்டும் க்ரெலின் ஹார்மோனை சரிசெய்து உங்கள் பசியின் முறையை ஒழுங்குபடுத்துகிறது.
இறந்த செல்களை நீக்குதல், பாதிக்கப்பட்ட செல்களை சரி செய்தல், இரத்த சுத்திகரிப்பு போன்றவற்றை மேற்கொள்ளுமாம். இந்த செயல்கள் நேரடியாக உங்கள் சரும அழகிற்கும் உடல் வடியமைப்புக்கும் உதவுகிறதாம்.
விரதத்திற்கு சரியான பயிற்சி இல்லையென்றால் அது உங்களுக்கு துன்பமாக முடியும். கண்டிப்பாக கருவுற்ற பெண்கள், தாய்ப்பாலுட்டும் பெண்கள் விரதத்தை தவிர்ப்பது நல்லது. கர்ப்பிணிகள் விரதம் இருந்தால் அவை குழந்தையின் வளர்ச்சியை பாதிக்கும். எனவே அவர்கள் விரதத்தை தவிர்ப்பது நல்லது.