பாஸ்ட் புட் உணவுகளை அதிகம் சாப்பிடுவது, தூக்கமின்மை, இரவில் மிக தாமதமாக சாப்பிடுவது, போன்ற பல்வேறு காரணங்களால் அமிலத்தன்மை ஏற்படுகிறது. வாழைத்தண்டு சாறு உடலில் உள்ள அமிலத்தின் அளவை கட்டுப்படுத்தி அமிலத்தன்மை, நெஞ்செரிச்சல் ஆகிவற்றிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.
வாழைத்தண்டில் ரத்ததில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் வைட்டமின் பி6 உள்ளது. ரத்த சோகை உள்ளவர்கள் வாழைத்தண்டை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் இரும்பு சத்து அதிகரிக்கும், இரத்த சோகை நீங்கும்.