இயற்கையில் கிடைக்கக்கூடிய விதைகளும் அவற்றின் பயன்களும்!

பப்பாளி விதை: பப்பாளி விதை கஷாயத்தைப் பருகிவந்தால் வயிற்றிலுள்ள பூச்சிகள் வெளியேறும், செரிமானம் அதிகரிக்கும்,  வாயுத்தொல்லை நீங்கும். ஒரு ஸ்பூன் விதையை அரைத்து முகத்தில் பூசிவந்தால், சருமம் பொலிவாகும். உடலில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கக்கூடியது.

 
* திராட்சை விதை: திராட்சைப் பழத்துடன் விதைகளைச் சேர்த்து உண்பது நல்ல பலனைத் தரும். ரத்த சோகை நோயால்  பாதிக்கப்பட்டவர்கள் இதன் விதைகளை உண்டு வந்தால், ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.
 
* நாவல் கொட்டை: நாவல் கொட்டையை, நிழலில் உலர்த்தி லேசாக வறுத்து, வெந்தயத்துடன் சேர்த்து அரைத்து நீர் அல்லது  மோருடன் கலந்து பருகலாம். மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும். சிறுநீரில் வெளியேறும் சர்க்கரையின் அளவும் கட்டுக்குள்  அடங்கும். சர்க்கரை நோயாளிகளுக்கு அருமருந்தாக பயன்படுகிறது.
 
* முருங்கை விதை: பெண்களுக்கு சத்துக் குறைவினால் ஏற்படும் தலைவலி, கால்களில் அடிக்கடி உண்டாகும் தசைப்பிடிப்பு  ஆகியவை நாளடைவில் குணமாகும். விதைகளை, நெய்யில் வறுத்து பொடித்து, பாலுடன் சேர்த்து காய்ச்சிக் குடித்தால்  ஆண்களுக்கு விந்தணுக்கள் அதிகரிப்பதுடன், விந்துவின் கெட்டித்தன்மை அதிகமாகும், நரம்புகள் பலப்படும்.
 
* பூசணி விதை: பூசணி விதையை நெய்யில் வறுத்து சாப்பிட்டு வந்தால், வெள்ளைப்படுதல் குறையும். ஆண்கள் பூசணி  விதையைப் பொடி செய்து பாலில் கலந்து குடித்தால், உடல் உஷ்ணம் குறைவதுடன் விந்தின் கெட்டித்தன்மை அதிகரிக்கும்.  பூசணி விதையை நசுக்கி கஷாயமாக்கிப் பருகினால், வயிற்றிலுள்ள பூச்சிகள் நீங்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்