தினமும் மாதுளை சாறு பருகி வருவதால் கிடைக்கும் அற்புத பலன்கள் !!

சனி, 26 பிப்ரவரி 2022 (16:49 IST)
மாதுளையில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் பைபர் அதிக அளவில் உள்ளது.


மாதுளை சாற்றில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் தசைகளை வலுப்படுத்தி, உடற்பயிற்சியின் பின்னர் மீட்க உதவும். அவர்கள் தடகள உடற்பயிற்சியின் போது செயல்திறனை மேம்படுத்தலாம்.

மாதுளையில் உள்ள பாலிஃபினல் என்ற காம்போன்ட் நம் மூளைக்கும் நம்முடைய ஞாபக சக்திக்கும் நல்லது. வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து அதிகமாக உள்ளதால் குடல் புண்,  மலச்சிக்கல் , வயிற்றுப் புண்,  மற்றும் ரத்த சோகை,  உள்ளவர்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது.

பொதுவாக மாதுளை இரத்த விருத்தியை ஏற்படுத்தும் உடலுக்கு பலம் கொடுக்கும் அதை துவர்ப்புச் சுவை வயிற்றுப்போக்கு , சீதபேதி ரத்த பேதி போன்றவை கட்டுப்படும்.

மாதுளம் பழம் மலமிளக்கும் இயல்புடையது. அன்றாடம் பாதி அளவு மாதுளை பழத்தை நன்றாக மென்று சாப்பிட மலக்கட்டு நீங்கி நன்றாக மலம் இளகி இறங்கும். கடுமையான இருமலுக்கு மாதுளம் பழத்தை பக்குவம் செய்து சாப்பிடலாம்.

மாதுளை பழத்தின் விதையை சேகரித்து வெயிலில் உலர்த்தி பொடி செய்து கொண்டு சிட்டிகை பொடியை பசுவின் பாலில் கலந்து தினமும் 2 வேளை சாப்பிட தாதுவை கூட்டி உடல் நலம் பெருகும்.

பித்தக் கோளாறுகள், அதிகப்படியான உடல் சூட்டினால் ஏற்படும் காய்ச்சல் போன்றவற்றை குணப்படுத்தி உடல் வெப்பத்தை சமப்படுத்தும் மேலும் குளிர்ச்சியை உண்டு பண்ணி நலம் பெறச் செய்யும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்