ஊசியில்லா கொரோனா மருந்து - அடுத்த மாதம் அறிமுகம்!

திங்கள், 13 செப்டம்பர் 2021 (13:04 IST)
கொரோனா தடுப்பு மருந்தான zycov-d அடுத்த மாதம் முதல் வாரம் இந்தியாவில் அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 30 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது.
 
தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 27,254 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 3,32,64,175 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் நாட்டின் 6வது தடுப்பூசியாக zydus cadila என்ற இந்திய நிறுவனம் தயாரித்துள்ள, டிஎன்ஏ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்தான zycov-d-க்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அவசர கால பயன்பாட்டிற்கு கடந்த அனுமதி வழங்கி உள்ளது.
 
இது 12 முதல் 18 வயதுடைய பயனாளிகளுக்கு வழங்கப்பட உள்ள முதல் தடுப்பு மருந்தாகும். மேலும், ஊசி மூலம் செலுத்தப்படாத உலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்து. இந்த மருந்து அடுத்த மாதம் முதல் வாரம் இந்தியாவில் அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மாதம் மத்தியில் இருந்து தடுப்பூசி விநியோகம் ஆரம்பமாகும் என்றும் அடுத்த மாதம் முதல் வாரத்தில் கிடைக்க தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்