கர்நாடக மாநிலத்தின் தார்வாடை சேர்ந்த பெண் ஷீத்தல். 2023 ஆகஸ்ட் 31 ஆம் தேதியன்று சோமேட்டோவில் ஒரு பிளேட் மோமோஸ் ஆர்டர் செய்துள்ளார். அந்த மோமோஸின் விலை ரூ.133 என்றும் அதற்கான பணத்தை கூகுள் பே மூலம் ஷீத்தல் செலுத்தியுள்ளார். சில நிமிடங்களில் ஷீத்தலின் போனுக்கு மோமோஸ் டெலிவரி செய்யப்பட்டதாக தகவல் வந்துள்ளது.
இதையடுத்து விரக்தியடைந்த ஷீத்தல் சோமேட்டோவுக்கு 2023 செப்டம்பர் 13 ஆம் தேதியன்று ஒரு லீகல் நோட்டீஸை அனுப்பினார். பலன் இல்லாததால் நுகர்வோர் நீதிமன்றத்தில் ஷீத்தல் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், புகார்தாரர் கூறியபடி அவருக்கு செய்ய வேண்டிய டெலிவரியை சோமேட்டோ செய்யவில்லை என்றும் இதற்கு சோமேட்டோ நிறுவனமே முழுப் பொறுப்பாகும் என்றும் கூறியது.
மேலும் ஷீத்தலுக்கு ஏற்பட்ட அசௌகரியத்துக்கும் மன உளைச்சலுக்கும் இழப்பீடாக ரூ.50,000மும் வழக்குச் செலவாக ரூ.10,000மும் சோமேட்டோ நிறுவனம் வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.