மகாராஷ்டிராவில் பெண்கள் மற்றும் படிக்கும் இளைஞர்களுக்கு மாத உதவித்தொகை வழங்கும் புதிய திட்டத்தை மராட்டிய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியின் ஏக்நாத் ஷிண்டே முதல்வராக உள்ள நிலையில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. சமீபமாக பல மாநிலங்களில் படிக்கும் பெண்கள், மகளிருக்கு பல உதவித்தொகை சலுகைகள் அறிவிக்கப்பட்ட நிலையில், மகாராஷ்டிராவிலும் புதிய உதவித்தொகை திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதை தொடர்ந்து ப்ளஸ் 2 முடித்தவர்களுக்கு மாதம் ரூ.6 ஆயிரமும், டிப்ளமோ முடித்தவர்களுக்கு மாதம் ரூ.8 ஆயிரமும், பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Edit by Prasanth.K