உத்தரப்பிரதேச மாநிலத்தில் லக்னோவில் இருந்து எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று சென்று கொண்டிருந்த நிலையில் அந்த ரயிலில் பிரசாந்த் குமார் என்பவர் பயணம் செய்தார். சாதாரண டிக்கெட் எடுத்து முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் ஏறிய அவருக்கு அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் நள்ளிரவில் திடீரென அவர் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் பயணிகள் அடித்ததால் படுகாயம் அடைந்த பிரசாந்த், காவல் நிலையத்தில் திடீரென உடல் நலக்குறைவு ஏற்படவே அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்து விட்டதாக கூறினர். இதனை அடுத்து போலீசார் இது குறித்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.