உலக பிரபலமான ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியது முதலாக ட்விட்டர் பயனாளர்களின் எண்ணிக்கை வேகமாக சரிய தொடங்கியுள்ளது. ப்ளூ டிக்கிற்கு கட்டணம், ட்வீட் பார்ப்பதற்கு அளவுகோல், பணியாளர்கள் பணி நீக்கம் என ட்விட்டரின் செயல்பாடுகள் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
ட்விட்டர் போலவே த்ரெட்ஸிலும் போட்டோ, வீடியோவை பதிவுடன் இணைக்கும் வசதி உள்ளது. 500 வார்த்தைகளுக்கு மிகாமல் இதில் பதிவிட முடியும். இன்ஸ்டாகிராமில் ஏற்கனவே ப்ளூடிக் பெற்ற கணக்குகள் இதிலும் ப்ளூடிக்கோடே செயல்படும்.
இந்த த்ரெட்ஸில் ட்விட்டரில் உள்ளதுபோல ட்விட்டர் ஸ்பேஸஸ், ஹேஷ்டேக் ட்ரெண்டிங் வசதிகள் காணப்படவில்லை. ட்விட்டர் போல த்ரெட்ஸுக்கு PC Web version இல்லை. ஆண்ட்ராய்டு, ஐபோன்களில் மட்டுமே பயன்படுத்த முடியும். எனினும் அடுத்தடுத்து கூடுதலாக பல அம்சங்கள் இடம்பெற கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.