மிக மிக குறைந்த வட்டியில், விவசாயிகளுக்கு கடன் வழங்கக்கூடிய திட்டம் இதுவாகும். விவசாயம் தொடர்பான பணிகளுக்கு இந்த கடன் வழங்கப்படுகிறது. கடன் கொடுக்கப்பட்ட பயிரின் அறுவடை காலத்தை பொறுத்து, இந்த கடனை திருப்பி செலுத்தும் காலம் நீட்டிக்கப்படுவது இந்த திட்டத்தின் மற்றொரு சிறப்பு அம்சம்.
இந்த திட்டத்தின் மூலம், விவசாயம், மீன்வளம், கால்நடை வளர்ப்பிற்கான கடன் தேவைகளை விவசாயிகளுக்கு குறுகிய கால கடன்கள் மற்றும் உபகரணங்களை வாங்கி கொள்ளலாம். ஒரு விவசாயி 3 லட்சம் ரூபாய் வரை கடன் பெற்றுக் கொள்ளலாம். கிசான் கிரெடிட் கார்டின் கீழ் ரூ.3 லட்சம் வரை விவசாயக் கடன் 7 சதவீத வட்டியில் கிடைக்கிறது. இதில் 3 சதவீத மானியமும் அடங்கும்.