கடந்த வாரம் சச்சின் குமார் என்பவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், சுவாமி விவேகானந்தா 1893 ஆம் ஆண்டு செப்டம்பர் 13 ஆம் தேதி சிகாகோ மாநாட்டில் கலந்து கொண்டபோது எடுக்கப்பட்ட வீடியோ என ஒரு வீடியோவை பகிர்ந்தார். அந்த வீடியோவில் விவேகானந்தர் போலவே ஒருவர் அரங்கத்தில் உரையாற்றுகிறார். ”Rare video of Swami Vivekanandha” என்று தலைப்பிட்ட அந்த வீடியோவை அனைவரும் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துவந்தனர்.
இந்நிலையில் இதில் பேசுபவர் விவேகானந்தர் இல்லை எனவும், இது விவேகானந்தர் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான “Life of Swami Vivekanandha” என்ற திரைப்படத்தில் வருகிற சிகாகோ மாநாடு காட்சிகள் என்றும் தெரியவந்துள்ளது. மேலும் அந்த வீடியோவில் குறிப்பிட்ட செய்தியும் தவறானது என கூறப்படுகிறது. அதாவது விவேகானந்தர் சிகாகோ மாநாட்டில் கலந்துகொண்டது செப்டம்பர் 13 அல்ல, செப்டம்பர் 11 ஆம் தேதி தான் கலந்துகொண்டாராம். இந்த வீடியோவை 12,000 பேர் ஷேர் செய்துள்ளதாக கூறப்படுகிறது.