உத்தர பிரதேசம் சிதௌலி பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் ஒரு இளைஞரை காதலித்து வந்த நிலையில் கர்ப்பமாகியுள்ளார். இந்த விஷயத்தை வீட்டுக்கு தெரியாமல் மறைத்து வந்துள்ளார் அந்த சிறுமி. ஆனால் ஆறு மாதங்களுக்கு பிறகு சிறுமி வயிறு பெரிதாக தொடங்கியதால் உண்மையை அறிந்து கொண்ட சிறுமியின் தந்தை, கர்ப்பத்திற்கு காரணம் யார் என விசாரித்துள்ளார்.
ஆனால் சிறுமி அந்த நபரின் பெயரை சொல்லாமல் மறைத்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் தந்தையும், சகோதரனும் தாக்கியதாலும், கழுத்தை நெரித்ததாலும் சிறுமி உயிரிழந்துள்ளார். இந்த உண்மையை மறைக்க தலையை வெட்டி மறைத்து விட்டு உடலை தூக்கி வீசியுள்ளனர். போலீஸார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டபோது குறிப்பிட்ட நபரின் வீட்டு பெண் சில நாட்களாக மாயமானதை கண்டு சந்தேகித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
விசாரணையில் சிறுமியை கொன்றதை அவர் தந்தை ஒப்புக்கொண்ட நிலையில், பெண்ணின் சகோதரர் தலைமறைவாகி விட்டார். யார் அந்த நபர் என்று தெரிந்து மகளுக்கு அவரையே திருமணம் செய்து வைக்க எண்ணியே கேட்டதாகவும், விபத்தாக சிறுமி இறந்துவிட்டதாகவும் அவர் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளது.