பக்கத்து வீட்டு பையனை சுட்டுக் கொன்ற பாஜக தலைவர் மகன்! – உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி!

ஞாயிறு, 31 ஜூலை 2022 (14:33 IST)
உத்தர பிரதேசத்தில் மாவட்ட பாஜக தலைவரின் மகன் சக சிறுவனை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசம் குஷாம்பி மாவட்ட பாஜக கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளராக இருப்பவர் சஞ்சய் ஜெய்ஸ்வால். இவரது 10 வயது மகன் ஆனந்த் அந்த பகுதியை சேர்ந்த மற்ற சில சிறுவர்களுடன் “திருடன் போலீஸ்” விளையாட்டு விளையாடியுள்ளான்.

அப்போது ஜெய்ஸ்வால் வைத்திருந்த உரிமம் பெற்ற துப்பாக்கியை விளையாட்டு துப்பாக்கி என நினைத்து சிறுவன் ஆனந்த் விளையாட எடுத்து சென்றுள்ளான். விளையாடிக் கொண்டிருந்தபோது பக்கத்துவீட்டு சிறுவனான வேதாந்த என்ற சிறுவன் மீது ஆனந்த் துப்பாக்கியால் சுட்டுள்ளான்.

இதில் மார்பில் குண்டு பாய்ந்த வேதாந்த ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்துள்ளான். துப்பாக்கி சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் சிறுவன் வேதாந்தாவை மருத்துவமனை கொண்டு சென்றுள்ளனர். ஆனால் வேதாந்தா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்