உத்தரபிரதேசம் மற்றும் ஹரியானா இரண்டு மாநிலங்களிலும் விகாஸ் துபேவை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில் நேற்று விகாஸ் துபேவின் கூட்டாளியான அமர் துபே ஹமர்பூர் பகுதியில் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதை தொடர்ந்து இன்று அதிகாலை விகாஸ் துபேவின் மற்றுமொரு கூட்டாளியும், கான்பூரில் போலீஸாரை சுட்டுக் கொன்றவர்களில் ஒருவருமான பஹுவா துபேயை போலீஸார் சுட்டுக் கொன்றுள்ளனர்.