நாடு முழுவதும் ஆதார் இணைப்புகளை, தகவல்களை சரிப்பார்ப்பதற்கும், மக்களுக்கு ஆதார் அட்டைகளை வழங்குவதற்கும் செயல்படும் யு.ஐ.டி.ஏ.ஐ அமைப்பு 127 பேருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் ஐதராபாத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவரும் ஒருவர். அந்த கடிதத்தில் “ஆதார் அட்டை பெறுவதற்காக அளிக்கப்பட்ட சான்றுகள் போலியானவை என தெரிவதாகவும், அதனால் குடியுரிமையை நிரூபிக்க வேண்டும்’ என வலியுறுத்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது.