இந்தியாவில் சமூக வலைதளங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் ட்விட்டரின் நிலைபாடு தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறது. இந்நிலையில் ட்விட்டர் தற்போது வெளியிட்ட திறந்த நிலை தகவலில் உலக நாடுகள் பல அங்கீகரிக்கப்பட்ட செய்தி நிறுவனங்கள் மற்றும் ஊடகவியாலாளர்களின் பதிவுகளை நீக்கும்படி கோரிக்கை வைத்ததாக தெரிவித்துள்ளது.
ட்விட்டர் கணக்குகளின் தகவல்களை தெரிவிக்கும் படி அதிக கோரிக்கை விடுத்ததில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாமிடத்திலும் உள்ளன. அதுபோல ஊடக பதிவுகளை நீக்க கோரியதில் ஜப்பான் முதலிடத்திலும், இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளதாகவும் ட்விட்டர் தகவல் வெளியிட்டுள்ளது.