குர்கான் அருகிலுள்ள ஜமல்பூர் எனும் கிராமத்தை சேர்ந்தவர் கோபிந்த் குமார். இவர் ஒரு ராணுவ வீரர். இவருக்கு 5 வயதில் இரட்டை பெண் குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று, உறவினருக்கு சொந்தமான ஒரு காரை தனது வீட்டின் முன்பு நிறுத்தியிருந்தார் கோபிந்த். காரின் கதவில் பிரச்சனை இருந்ததால், அதை மூடாமல் திறந்த நிலையில் காரை நிறுத்தியிருந்தார். இந்நிலையில், அவரின் இரு மகள்களும் வீட்டிற்கு வெளியே நாய்க்குட்டியோடு விளையாடிக் கொண்டிருந்தனர்.