ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், துணை முதல்வர் சச்சின் பைலட்டிற்கும் இடையே மோதல் எழுந்துள்ளது. சச்சின் பைலட் தனக்கு ஆதரவாகவே அதிக எம்.எல்.ஏக்கள் உள்ளதாக கூறி வருகிறார்.
கர்நாடகா, மத்திய பிரதேசத்தில் நடந்தது போன்று ராஜஸ்தானிலும் காங்கிரஸ் ஆட்சியை இழந்துவிட கூடாது என்பதில் கட்சி தலைமை தீவிரமாக இருந்தது. எனவே, நேற்று நடந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் அசோக் கெலாட் தலைமையிலான அரசாங்கத்தை ஆதரிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் சத்தியத்தை தொந்தரவு செய்யலாம்; ஆனால் தோற்கடிக்க முடியாது என சச்சின் பைலட் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ராஜஸ்தான் மாநில துணை முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், சச்சின் பைலட் ட்விட்டரில் இம்மாதிரி பதிவிட்டுள்ளார்.