300 ரூபாய் டிக்கெட் 3000: திருப்பதி தேவஸ்தான போலி டிக்கெட் விற்ற 7 பேர் கைது!

புதன், 5 ஜனவரி 2022 (08:51 IST)
திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்யும் 300 ரூபாய் டிக்கெட் மூவாயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்த 7 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய ஆன்லைன் மூலம் 300 ரூபாய் மற்றும் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் போலி டிக்கெட்டுக்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலை அடுத்து தேவஸ்தான அதிகாரிகள் அதிரடியாக சோதனை செய்தனர்
 
இதில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் போலி டிக்கெட்டுக்களை விற்பனை செய்த 7 பேர்கள் சிக்கியுள்ளதை அடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் 300 ரூபாய் போலி டிக்கெட்டுகளை 3,000 ரூபாய் வரை விற்பனை செய்து வந்ததாக தெரியவருகின்றது
 
மேலும் அவர்களிடம் இருந்து ஏராளமான போலி டிக்கெட்டுகள் மற்றும் 20 ஆயிரம் பணம் கைப்பற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 7 பேரிடமும் போலீசார் விசாரணை செய்து வருவதாகவும் இதை போல் போலி டிக்கெட் விற்பவர்கள் மேலும் இருக்கிறார்களா என்பது குறித்த விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்