17 ஆவது மக்களவைத் தேர்தலின் முடிவுகள் நேற்று வெளியாகின. பாஜக தனிப்பெரும்பாண்மையோடு ஆட்சி அமைக்கும் அளவுக்கு வெற்றியைப் பெற்று ஆட்சியைத் தக்க வைத்துள்ளது. பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 350 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. காங்கிரஸ் ஒட்டுமொத்தமாக 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்துள்ளது.
ஆனால் தேர்தல் முடிந்துள்ள நிலையில் பீஜ்பூர் தொகுதி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏவாக பதவி வகித்து வருபவர் சுப்ரங்சூ ராய் பாஜகவுக்குத் தாவ இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதை உண்மையாக்குவது போல கட்சிக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக கூறி, சுப்ரங்சூ ராயை திரிணாமுல் காங்கிரஸ் தலைமை 6 ஆண்டுகளுக்கு அதிரடியாக சஸ்பென்ட் செய்ததுள்ளது.