சூடுபிடிக்கும் ஜி20 உச்சி மாநாடு வேலைகள்! டெல்லியில் பிரம்மாண்ட கட்டிடம் திறப்பு!
ஞாயிறு, 23 ஜூலை 2023 (15:03 IST)
ஜி20 மாநாட்டிற்கான பகுதி நிகழ்வுகள் பல்வேறு இடங்களில் நடந்து வரும் நிலையில் டெல்லியில் உச்சிமாநாட்டிற்கு பிரம்மாண்ட கட்டிடம் தயாராகி வருகிறது.
ஜி20 உச்சி மாநாடு இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் விமரிசையாக நடைபெற உள்ளது. அதற்கு முன்னர் பல்வேறு இடங்களில் ஜி20 மாநாட்டிற்கான பகுதி நிகழ்வுகள் நடைபெறுகின்றன. அந்த வகையில் சென்னை மாமல்லபுரத்தில் நாளை ஜி20 மாநாட்டிற்கான கூட்டம் நாளை நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பிரான்ஸ், ஜெர்மன், இத்தாலி, இங்கிலாந்து, இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, தென்கொரியா, வடகொரியா, அமெரிக்கா, நார்வே, டென்மார்க் உள்ளிட்ட பல நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.
செப்டம்பரில் ஜி20 உச்சி மாநாடு டெல்லியில் நடைபெற உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்காக டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள ஐடிபிஓ வளாகம் மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.
International exhibition and convention centre என இதற்கு பெயரிடப்பட்டுள்ளது. பல்வேறு வசதிகள் கொண்ட இந்த கட்டிடத்தில் 7000 பேர் வரை அமர இருக்கைகள் உள்ளது. வரும் ஜூலை 26ம் தேதி பிரதமர் மோடி இந்த கலாச்சார மையத்தை திறந்து வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.