மந்திர சக்தி சொல்லுச்சாம் கைக்குழந்தையை கொல்ல: தாய் செய்த கொடூர செயல்!

சனி, 22 ஏப்ரல் 2017 (16:14 IST)
ராஜஸ்தான் மாநிலத்தில் பெண் ஒருவர் தான் பெற்ற 4 மாத பெண் குழந்தையை மந்திர சக்தி சொன்னதால் கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
 
ராஜஸ்தான் மாநிலம் பிரதாப் நகரில் வீடு ஒன்றில் நான்கு மாத பெண் குழந்தை நீர்த்தொட்டியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தது. இதனையடுத்து குழந்தையின் தந்தை காவல்துறையிடம் புகார் அளித்தார். இதனால் காவல் துறை குழந்தையின் தாய் பிங்கியிடம் விசாரணை நடத்தினர்.
 
அதில் முதல் கட்ட விசாரணையில் பிங்கி மர்ம நபர்கள் சிலர் குழந்தையை தன்னிடம் இருந்து பறித்துக்கொண்டு ஓடியதாக கூறினார். ஆனால் வெளியாட்கள் யாரும் வீட்டிற்குள் வந்ததாக எந்த தடயமும் காணப்படவில்லை. அதுமட்டுமல்லாமல் குழந்தை இறந்து கிடந்த நீர்த்தொட்டியின் சாவியும் தாய் பிங்கியிடமே இருந்துள்ளது.
 
இதனையடுத்து காவல்துறையின் சந்தேகம் முழுவதும் பிங்கி மீது திரும்பியது. விசாரணையை கடுமையாக்கியதில் பிங்கி குழந்தையை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். சில மந்திர சக்தி வந்து தன் குழந்தையை கொலை செய்ய சொன்னதால் அப்படி செய்தேன்.
 
அப்போது தான் தனது கணவர் மற்றும் 4 வயது மகனுடன் நிம்மதியாக வாழ முடியும் என அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து பிங்கி மீது கொலை வழக்கு பதிவு செய்த காவல்துறை அவரை சிறையில் அடைத்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்