சிபிஐக்கு புதிய இயக்குனர் நியமனம்: 3 மாதங்களாக காலியாக இருந்த பதவி!

புதன், 26 மே 2021 (07:25 IST)
சிபிஐக்கு புதிய இயக்குனர் நியமனம்: 3 மாதங்களாக காலியாக இருந்த பதவி!
கடந்த மூன்று மாதங்களாக சிபிஐ இயக்குனர் பதவி காலியாக இருந்த நிலையில் தற்போது சிபிஐ இயக்குநராக சுபோத்குமார் ஜெய்ஸ்வால் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளர்.
 
புதிய சிபிஐ இயக்குனரை தேர்வு செய்வதற்காக பிரதமர் மோடி, மக்களவை எதிர்க்கட்சி தலைவராக ரஞ்சன் சவுத்ரி மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா ஆகியோர் நேற்று ஆலோசனை நடத்தினார்கள்
 
இந்த ஆலோசனையின் முடிவில் சிபிஐ இயக்குநராக சுபோத்குமார் குமார் ஜெய்ஸ்வால் என்பவர் நியமனம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இவர் இரண்டு ஆண்டுகள் இந்த பணியில் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
சிபிஐ இயக்குநராக இருந்த ரிஷிகுமார் சுக்லா அவர்கள் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் ஓய்வு பெற்ற நிலையில் அந்த பொறுப்புக்கு யாரும் நியமிக்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது சுபோத்குமார் ஜெய்ஸ்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இவர் ஏற்கனவே மகாராஷ்டிரா மாநில காவல்துறை டிஜிபி ஆக பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்