அழுகையை நிறுத்தாத குழந்தையின் மூச்சை நிறுத்திய வளர்ப்புத்தாய்

திங்கள், 1 ஆகஸ்ட் 2016 (16:02 IST)
ஓயாமல் அழுது கொண்ட குழந்தையை சுவற்றில் மோதி கொலை செய்த வளர்ப்புத்தாய் மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளார்.


 

 
மும்பையில் வசித்து வருபவர் அப்துல் ஷேக். இவர் தன்னுடைய முதல் மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவருக்கு இரு குழந்தைதைள் உள்ளனர். குழந்தைகளை அவர் தன் பொறுப்பிலேயே வளர்த்து வந்தார்.  குழந்தைகளின் வளர்ப்பதற்காக ஒரு வருடத்திற்கு முன்பு ரசியாஷேக் என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்துள்ளார் அப்துல்.
 
அப்துல் ஷேக் சம்பூர் பகுதியில் ஒரு ஹோட்டலை நடத்தி வருகிறார்.  ரசியா அவரின் இரு குழந்தைகளையும் பராமரித்து வந்தார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை,  அப்துலில் ஒன்றரை வயது பெண் குழந்தைக்கு உடல் நலம் சரியில்லை எனத் தெரிகிறது. இதனால், அந்த ஓயாமல் குழந்தை அழுது கொண்டே இருந்துள்ளது.
 
ரசியா எவ்வளவு முயன்றும், குழந்தையின் அழுகையை நிறுத்த முடியவில்லை. இதனால் கோபம் அடைந்த ரசியா, அக்குழந்தையின் தலையை வீட்டு சுவற்றின் மீது மூன்று முறை மோதியுள்ளார். இதனால் அந்த குழந்தை மயக்கம் அடைந்துள்ளது.  உடனே குழந்தையை மருத்துவமனைக்கு கொன்று சென்றுள்ளார் ரசியா. ஆனால், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். 
 
குழந்தையின் பிரேத பரிசோதனையில், தலையில் காயம் உள்ளதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் ரசியாவிடம் நடத்திய சோதனையில் அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்