காஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தில் 8 வயது சிறுமி ஆசிஃபா கற்பழித்து கொலை, ஒடிசாவில் 9 வயது சிறுமி கற்பழித்து கொலை, உத்தரபிரதேசத்தில் இளம் பெண் கொடூரமாக கற்பழிக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் டெல்லியை சேர்ந்த பண்டி என்ற மனித மிருகம், அதே பகுதியில் உள்ள மன நலம் பாதிக்கப்பட்ட 12 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை அளித்துள்ளான். கொடூரத்தின் உச்சமாய், தன் இச்சை செயலை வீடியோவாக எடுத்து, சிறுமியின் பெற்றோருக்கு அனுப்பியுள்ளான். இதனால் அதிர்ந்துபோன சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.