ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ். சர்மிளா. இவர், ஒய்.எஸ்.ஆர். தெலங்கானா என்ற கட்சியைத் தொடங்கி, பாத யாத்திரை மேற்கொண்டு அம்மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட இருந்தார்.
சமீபத்தில், 2023ம் ஆண்டு தெலுங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு ஆதரவு தெரிவித்து, பிரச்சாரம் மேற்கொண்டார்.
பாஜகவுக்கு எதிரான கருத்துகளை கூறி வந்த ஒய்.எஸ். சர்மிளா, காங்கிரஸுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில், அவர் தன் கட்சியை காங்கிரஸில் இணைக்கும்படி காங்கிரஸ் மேலிடம் பேச்சுவார்த்தை நடத்தியது.
இதையடுத்து, ஒய்.எஸ். சர்மிளா காங்கிரஸில் இணையவுள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், சர்மிளாவின் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்கவுள்ளது. இத்திருமணத்தில் சோனியா, மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் அழைக்க சர்மிளா திட்டமிட்டுள்ளார்.
நாளை அவர் டெல்லியில், சோனியா, ராகுல், மல்லிகார்ஜூன கார்கேயை சந்தித்து, முறைப்படி காங்கிரஸில் இணையவுள்ளதாகவும் அவருக்கு தெலங்கானா காங்கிரஸ் தலைவர் பதவி வழங்கப்படலாம் என தகவல் வெளியாகிறது.