கேரள முதல்வரின் தலையை கொண்டு வந்தால் ரூ.1 கோடி. ஆர்.எஸ்.எஸ் தலைவர் சர்ச்சை அறிவிப்பு

வியாழன், 2 மார்ச் 2017 (21:07 IST)
ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் அவ்வபோது சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருவதை வாடிக்கையாக கொண்டு வருகின்றனர். அந்த வகையில் மத்திய பிரதேச மாநிலத்தை சார்ந்த ஆர்எஸ்எஸ் தலைவர் சந்திரவத் என்பவர் கேரள முதல்வர் பினராயி விஜயன் தலையை கொண்டு வந்தால் அவருக்கு ஒரு கோடி ரூபாய் தருவதாகவும், இந்த பணத்திற்காக தனது சொத்துகள் அனைத்தையும் விற்கவும் தயார் என்றும் அறிவித்துள்ளார்.




கேரளாவில் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக உறுப்பினர்கள் கொலை செய்யப்பட்டு வருவதற்கு அம்மாநில முதலமைச்சரும் மூத்த இடதுசாரி தலைவருமான பினராயி விஜயன்தான் காரணம்  என்று சந்திரவத் கடந்த சில நாட்களாக குற்றம் சாட்டி வருகிறார் என்பது தெரிந்ததே.

இந்நிலையில் சமீபத்தில் ஆர்.எஸ்.எஸ். குறித்து  கருத்து தெரிவித்த கேரள முதல்வர், 'இந்தியாவில் பிரிவினையை உண்டாக்க ஆர்எஸ்எஸ் முயற்சி செய்கிறது என்று கூறியிருந்தார். இதனை அடுத்தே சந்திரவத் பினராயி விஜயன் தலைக்கு ஒரு கோடி கொடுப்பதாகக் கூறியுள்ளார் என்பது குறிபிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்