ஊரடங்கு விதிகளை மீறியவர்களுக்கு ரோஜா பூ! நூதன முறையை கையாண்ட காவல்துறை!

ஞாயிறு, 23 மே 2021 (17:43 IST)
ஊரடங்கு விதிகளை மீறியவர்களுக்கு ரோஜா பூ!
ஊரடங்கு விதிகளை மீறியவர்களுக்கு ரோஜா பூ கொடுத்து நூதன முறையில் காவல்துறையினர் விழிப்புணர்வை ஏற்படுத்திய சம்பவம் டெல்லி அருகே நடந்துள்ளது
 
டெல்லியில் கடந்த சில வாரங்களாகவே கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எனவே ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் அவசிய தேவை இல்லாமல் வெளியே வருபவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டெல்லி அரசு எச்சரித்திருந்தது 
 
இந்த நிலையில் பலர் டெல்லியில் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே வந்து காவல்துறை நடவடிக்கைக்கு ஆளாகி உள்ளனர். அந்தவகையில் இன்று டெல்லியில் காவல்துறையினர் நூதன முறையில் ஊரடங்கு உத்தரவை மீறியவர்களை கையாண்டனர். ஊரடங்கு விதிகளை மீறி வெளியே சுற்றி தெரிந்தவர்களுக்கு ரோஜாப்பூ வழங்கி நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்க்ள். மேலும் அவர்களுக்கு எச்சரிக்கையூட்டி வீடுகளுக்கு பத்திரமாக அனுப்பி வைத்தனர். காவல்துறையினர்கள் கனிவோடு செய்யும் இந்த விழிப்புணர்வு மக்கள் மனதை கவர்ந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்