ஆஸ்திரேலியாவின் இந்திய தூதரான ரேணு பால், அமைச்சகத்தின் அனுமதி இல்லாமல், அதிக பணத்தை பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்தது.
மேலும் அவர் தங்கிய வீட்டின் வாடகைக்காக இந்திய மதிப்பில் ரூ.15 லட்சம் மாதம் செலவிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ரேணுகா உடனடியாக நாடு திரும்புமாறு வெளியுறவுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இவரின் ஆஸ்திரேலிய இந்திய தூதருக்கான பதவிக் காலம் அடுத்த மாதத்துடன் நிறைவடைய உள்ளது கூடுதல் தகவல்.