மக்களை மிரட்டி பணம் பறிக்கிறது மத்திய அரசு! – ராகுல்காந்தி குற்றச்சாட்டு!
செவ்வாய், 19 அக்டோபர் 2021 (11:07 IST)
பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வு குறித்து கண்டனம் தெரிவித்துள்ள ராகுல்காந்தி மக்களை அரசு மிரட்டி வரி வசூல் செய்வதாக தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களில் நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலை ஏகமாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் தற்போதும் மெல்ல மெல்ல விலை அதிகரித்துக் கொண்டே வருவது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வு குறித்து கண்டனம் தெரிவித்துள்ள ராகுல் காந்தி ”மத்திய அரசு மக்களை மிரட்டி வரியை பறிக்கிறது. மோடியின் நண்பர்கள் நலனுக்காக ஏமாற்றப்படும் மக்களுக்கு ஆதரவாக நான் இருக்கிறேன். தொடர்ந்து அவர்களுக்காக குரல் கொடுப்பேன்” எனக் கூறியுள்ளார்.