மேற்கு அமெரிக்க நாடான நைஜீரியா, தென் அமெரிக்கா நாடான பிரேசில், மேற்கிந்திய தீவுகளில் ஒன்றான டயானா ஆகிய நாடுகளுக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம் செய்துள்ளார்.
இந்த நிலையில் இன்று காலை, அவர் நைஜீரியாவில் இருந்து பிரேசிலுக்கு சென்றுள்ளார். பிரேசில் நாட்டில் இன்றும் நாளையும் நடைபெறும் ஜி20 மாநாட்டில் அவர் கலந்து கொள்கிறார். பிரேசில் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சீன அதிபர் ஜின்பின் உள்பட பல நாடூகளின் அதிபர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "ஜி20 மாநாடு பங்கேற்க பிரேசில் நாட்டிற்கு வந்துள்ளேன். பல்வேறு உலக தலைவர்களோடு உச்சி மாநாட்டின் ஆலோசனைகள் மற்றும் பயனுள்ள பேச்சுக்களை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்," என்று தெரிவித்துள்ளார்.