வேலூர் மாவட்டத்தில் உள்ள சிபிஎஸ்இ பள்ளி கலந்துரையாடல் நிகழ்ச்சி ஆளுநர் மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் மாணவ, மாணவிகள், பள்ளி முதல்வர் சரவணன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
என் கடமைகளை நான் முழுமையாக செய்கிறேன். அதன் மூலம் மனநிறைவு அடைகிறேன். குழந்தைகள் ஓடி விளையாட வேண்டும். முக்கியமாக மாணவர்கள் கால்பந்து, கைப்பந்து, பூப்பந்து போன்றவை விளையாட வேண்டும்.
உங்கள் பாடத்தையும் தாண்டி சாதனையாளர்கள் மற்றும் அறிஞர்களின் சுயசரிதையை படிக்க வேண்டும். ஏதேனும் ஓர் இசைக்கருவியை வாசிக்க கற்றுக் கொள்ளுங்கள். இசை உங்களுக்கு மன அமைதியையும், இன்பத்தையும் கொடுக்கும். நீங்கள் தினந்தோறும் ஒரு பக்கமாவது உங்கள் அனுபவங்களை பற்றி எழுத வேண்டும், என்றார்.