இந்தியா முழுவதும் உள்ள பல மாநிலங்களில் குறிப்பாக மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், டெல்லி, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது இதனை அடுத்து பல விஐபிகள் இந்த ஆண்டு ஹோலி பண்டிகையை கொண்டாட வில்லை என அறிவித்தனர்
பிரதமரின் சொந்த தொகுதியான வாரணாசியில் இன்று மிகச் சிறப்பாக ஹோலிப் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. வாரணாசியில் உள்ள கங்கை ஆற்றங்கரையில் மக்கள் ஹோலி பண்டிகையை இன்று கொண்டாடி மகிழ்ந்தனர். ஒருவர் மீது ஒருவர் வண்ணப் பொடிகளை முகத்திலும் உடலிலும் பூசி மகிழ்ந்தனர். பிரதமரின் வேண்டுகோளை ஏற்று பலர் முகக்கவசம் அணிந்தே ஹோலியை கொண்டாடி வருகின்றனர்.