இந்தியாவில் 6ஜி சேவை எப்போது? பிரதமர் மோடி தகவல்

செவ்வாய், 17 மே 2022 (13:37 IST)
இந்தியாவில் 6ஜி சேவை எப்போது? பிரதமர் மோடி தகவல்
டிராய் அமைப்பின் வெள்ளி விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி இந்தியாவில் 6ஜி  சேவை எப்போது என்பது குறித்த தகவலை வெளியிட்டுள்ளார் 
 
இந்தியாவில் 5ஜி சேவை இன்னும் தொடங்கப்படவில்லை என்பதும் ஆனால் அதே நேரத்தில் விரைவில் தொடங்கப்படுதற்கான வாய்ப்புகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்தியாவில் 6ஜி  சேவை அடுத்த பத்தாண்டுகளில் நம்மால் தொடங்க முடியும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார் 
 
அதேபோல் 5ஜி சேவை இந்தியாவில் தொடங்கப்பட்டால் 450 பில்லியன் பொருளாதாரத்திற்கு பங்காற்றும் என்றும் பிரதமர் மோடி இந்த நிகழ்ச்சியில் பேசியுள்ளார்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்