கேரளாவில் விமானம் இரண்டாக உடைந்து பெரும் விபத்து ! 191 பேரின் கதி ?
வெள்ளி, 7 ஆகஸ்ட் 2020 (21:16 IST)
கேரள மாநிலம் கோழிக்கோடில் விமான ஓடுதளத்தில் ஒரு விமானம் இரண்டாக உடைந்து பெரும் விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலத்தில் தற்போது மழை பெய்து வருகிறது. அதனால் அங்கு நிலப்பரப்பு ஈரப்பதமாக இருந்ததாகத் தெரிகிறது.
துபாயில் இருந்து இந்தியர்களை வந்தே பாரத் திட்டத்தின் கீழ் தாய்நாடு கோழிக்கொடுக்கு அழைத்து வந்த ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமானம் இரண்டாக உடைந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
ஓடுபாதை வழுக்கியதால் தான் விமானம் ஓடுபாதையில் நிற்காமல் சென்று விபத்து ஏற்பட்டதாகத் தெரிகிறது.
இதில் பயணம் செய்த 191 பேரின் கதி என்னவென்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது பயணிகளை மீட்க ராணுவத்தினர், போலீஸார், உள்ளூர் மக்கள், தன்னாவலர்கள் போன்றோர் பயணிகளை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு அழைத்துச்சென்று வருகின்றனர்.
லேசாக காயமடைந்தவர்களுக்கு முதலுதவி அளிக்கப்படுகிறது. விமானி உள்ளிட்ட 2 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிகிறது.